தொழிலாளர் பற்றாக்குறையால் கிராமப்பகுதிக்கு செல்லும் பஸ்கள் ரத்து
அரசு போக்குவரத்துக்கழகத்தில் தொழிலாளர் பற்றாக்குறையால் கிராமப்பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சாத்தூர்,
சாத்தூரில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து 70 பஸ்கள் இயக்கப்படும் நிலையில் இவற்றில் 40 பஸ்கள் டவுன் பஸ்களாகும். இவற்றை இயக்கிட போதுமான டிரைவர்கள், கண்டக்டர்கள் இல்லை. இதனால் சில தினங்களாக வேடப்பட்டி, அஞ்சம்பட்டி, ஜெகவீரன்பட்டி, அம்மாபட்டி ஆகிய கிராமங்களுக்கு இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் ரத்துசெய்யப்பட்டு விட்டன. பணிமனையில் மாதாமாதம் சராசரியாக 5 தொழிலாளர்கள் ஓய்வு பெற்று வருவதே பஸ்களை நிறுத்துவதற்கு காரணமென்று கூறப்படுகிறது.
கிராமப்புற மக்கள் இதனால் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். ஆனால் தொழிற்சங்க பிரதிநிதிகளோ, பற்றாக்குறையை கருத்தில் கொள்ளாமல் தங்களுக்கு வேண்டிய ஊழியர்களுக்கு விரும்பும்போதெல்லாம் விடுமுறை கொடுக்க ஏற்பாடு செய்து விட்டு நிலமையை மேலும் மோசமாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆட்கள் இல்லாத நிலையில் பணிநிரந்தரம் செய்யப்படாதவர்களை தொடர்ந்து 2 நாட்கள் வேலைபார்க்க கட்டாயப்படுத்துகின்றனர். ஓய்வின்றி ஒரு புறம் சிலர் வேலை செய்கையில் மறு புறமோ சிலர் தாங்கள் விரும்பும்போது மட்டும் வேலைக்கு வந்தால் போதும் என்ற நிலை உள்ளது. சாத்தூர் பணிமனையை பொறுத்த மட்டில் தொழிலாளர்களின் ஓய்வு அறையிலும் போதிய வசதியில்லை எனவும் இதில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
கடந்த மே மாதம் விருதுநகர் மண்டலத்தில் சுமார் 80 பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அந்த காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஓய்வின்றி பஸ்களை இயக்கும்போது விபத்து நிகழ வாய்ப்பு இருப்பதால் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story