நில அளவை அதிகாரியை கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது


நில அளவை அதிகாரியை கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2018 4:30 AM IST (Updated: 2 Jun 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

அரசு பணி செய்யவிடாமல் தடுத்து நில அளவை அதிகாரியை கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் நில அளவை வட்ட சார் ஆய்வாளராக சிவக்குமார்(வயது 45) உள்ளார். நேற்று முன்தினம் இவர் தனது உதவியாளர் பிரபாகருடன் சென்று எம்.எஸ்.நகர் கருப்பராயன் கோவில் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்வதற்காக சென்றார்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி(41), அவருடைய உறவினர்களான ராமசாமி(31), தினேஷ்(30) ஆகியோர் சேர்ந்து நிலத்தை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கத்தியை காட்டி அவர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிவக்குமார் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரை பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயமோகன் மற்றும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினார்கள். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து, அவர்களுக்கு கத்தியை காட்டி கொலைமிரட்டல் விடுத்த குற்றத்துக்காக கிருஷ்ணசாமி, ராமசாமி, தினேஷ் ஆகிய 3 பேரையும் திருப்பூர் வடக்கு போலீசார் நேற்று கைது செய்தனர்.

Next Story