அரசு பள்ளிகளை நோக்கி நன்கொடையாளர்கள் வர வேண்டும் - நீதிபதி முகமதுஜியாபுதீன் பேச்சு
அரசு பள்ளிகளை நோக்கி நன்கொடையாளர்கள் வர வேண்டும் என நீதிபதி முகமதுஜியாபுதீன் கூறினார்.
திருப்பூர்,
அரசு பள்ளிகளை நோக்கி நன்கொடையாளர்கள் வரவேண்டும் என்று திருப்பூர் செல்லம்மாள் காலனி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பாட புத்தகங்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகமதுஜியாபுதீன் கூறினார்.
கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளான நேற்று மாணவ-மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்றனர். அந்த வகையில் திருப்பூர் சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.
பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கும் விழா மற்றும் கணினி ஆய்வகம் திறப்பு விழா ஆகியவை நடைபெற்றது. விழாவில் கிராமக்கல்விக்குழு தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பொன்.பழனிச்சாமி முன்னிலை வகித்தார். தொழில் அதிபர் சிறுமுகை ரவிக்குமார், பள்ளி முன்னாள் மாணவர்கள் பூபதி, ரவிக்குமார், மேலாண்மைக்குழு தலைவர் சுதா ஆகியோர் கலந்துகொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் நாகராஜ்கணேஷ்குமார் வரவேற்றார். இதில் திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகமதுஜியாபுதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கணினி ஆய்வகத்தை திறந்துவைத்தார். பின்னர் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சில தனியார் பள்ளிகளில் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், சூ, சாக்ஸ், புத்தகப்பை, பேனா, பென்சில் என்று அனைத்தும் எங்கள் பள்ளிகளில் தான் வாங்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள். இதற்கே ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்ய வேண்டியது உள்ளது. ஆனால் அரசு பள்ளிகளில் இவை அனைத்தும் விலையில்லாமல் கொடுக்கிறார்கள். இங்குள்ள குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை போலவே டை அணிந்து வந்துள்ளதை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். நான் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளிக்கு நீதிபதி ஒருவர் வந்து கொடியேற்றினார். அதை பார்த்த போது என்மனதில் நானும் நீதிபதியாக வேண்டும் என்ற ஒரு விதை விழுந்தது. அந்த விதை முளைத்து பெரிய மரமாக என்மனதில் பதிந்ததால்தான் நான் ஒரு நீதிபதியாக உங்கள் முன்னால் நிற்க முடிந்தது.
இங்குள்ள குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கும். அதை தெரிந்து கொண்டு அதற்கேற்றபடி ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும். அந்த மாதிரியான நேரங்களில் ஆசிரியர்கள் மாணவர்களாகவும், மாணவர்கள் ஆசிரியர்களாகவும் மாறிக்கொள்ள வேண்டும். அப்போது தான் கற்கும் திறன் அதிகரிக்கும். மாணவர்கள் ஏதாவது கேள்வி கேட்டால் அவர்களை உட்கார சொல்லக்கூடாது. அவர்களை பேச விட வேண்டும். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 5 பேராவது நீதிபதியாக வரவேண்டும்.
வீடுகளில் மாணவர்கள் படிப்பதற்காக பெற்றோர் தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்து விடவேண்டும். மாணவர்கள் அதே இடத்தில் அமர்ந்து தான் படிக்க வேண்டும். தினசரி இடத்தை மாற்றக்கூடாது. பெற்றோர் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். மாணவனின் படிப்புதான் முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்களை தொலைக்காட்சி பார்க்கவேண்டாம் என்று சொல்லவில்லை. ஒரு மணி நேரத்தில் 50 நிமிடம் படிக்க வேண்டும். 10 நிமிடம் மட்டுமே தொலைக்காட்சி பார்க்க வேண்டும்.
ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை மாணவர்கள் அன்றைய தினமே படித்து முடித்துவிட வேண்டும். நாளை ஆசிரியர் நடத்தும் பாடத்தை மாணவர்கள் இன்றே படித்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. அப்போதுதான் ஆசிரியர் பாடம் நடத்தும் போது எளிதாக புரியும். புத்தகங்கள் உங்கள் கைகளுக்கு வந்து விட்டது. எனவே இன்றே படிக்கத்தொடங்கிவிடுங்கள். இங்கே நல்ல எண்ணங்கள் கொண்ட நன்கொடையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளார்கள். இதனால் இந்த பள்ளி சிறந்த கட்டமைப்பு வசதியுடன், மிகவும் தூய்மையாக காணப்படுகிறது.
இதேபோல திருப்பூரில் உள்ள நன்கொடையாளர்கள் பல்வேறு துறைகளுக்கு நன்கொடை வழங்கி வருகிறார்கள். அவர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வரவேண்டும். அவ்வாறு அவர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வந்தால் ஒரு ஆண்டுக்குள் அனைத்து அரசு பள்ளிகளும் சிறந்த கட்டமைப்பு, தூய்மையான குடிநீர், சுகாதாரமான கழிவறை என்று தேவையான அடிப்படை வசதிகளுடன் தனியார் பள்ளி மாணவர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் மாறிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story