சங்கராபுரத்தில் தபால் ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
சங்கராபுரம் வட்டத்தில் உள்ள கிராம புற அஞ்சலக ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் வட்ட அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சங்கம கடந்த மே.22–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 9–ம் நாள் போராட்டத்தில் சங்கராபுரம் போஸ்ட் ஆபீஸ் அருகில் சங்கராபுரம் வட்டத்தில் உள்ள கிராம புற அஞ்சலக ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் 7–வது ஊதியக்குழு அமைப்பது, கமலேஷ்சந்திரா அறிக்கையினை அமுல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கையினை வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்தனர். இதில் சங்க செயற்குழு உறுப்பினர்கள் மணவாளன், கார்மேகம், தண்டபாணி, கண்ணன், அழகப்பன், தாவிள்ளை, அலாவுதீன், ஆண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த அஞ்சலக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தினால் தபால்கள் தேங்கி கிடக்கின்றது.
Related Tags :
Next Story