அங்கன்வாடி மையத்தில் முன் பருவக்கல்வி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலையில் அங்கன்வாடி மையத்தில் முன் பருவக்கல்வியை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை,
தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் மூலமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 2 வயது முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை கல்வி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தினந்தோறும் பல வகையான மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலமும், வயது மற்றும் வளர்ச்சி முன்னேற்றத்திற்கு ஏற்றார் போல் கல்வியும் அளிக்கப்படுகிறது. மேலும், குழந்தைகளுக்கு அரசு மூலம் செயல்பாடு புத்தகம், எழுது பொருள், விளையாட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது. யோகாவும் கற்றுத்தரப்படுகிறது. காலாண்டிற்கு ஒரு முறை ஆய்வுத்தாள்கள் மூலம் ஆய்வு செய்து பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ச்சி நிலை குறித்து விளக்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 2,127 அங்கன்வாடி மையங்களில் 2 வயது முதல் 5 வயது வரை 51 ஆயிரத்து 636 குழந்தைகள் உள்ளனர். இதில் இந்த ஆண்டு 2 வயதுடைய 11 ஆயிரத்து 960 குழந்தைகளுக்கு நேற்று முதல் முன் பருவக்கல்வி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை நகராட்சி துராபலித் தெருவில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் முன் பருவக்கல்வி வித்தியாரம்பம் மற்றும் கல்வி ஆரம்ப பாரம்பரிய செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, குழந்தைகளுடன் சேர்ந்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து நெல் மற்றும் ஊசி கொண்டு தேனில் தோய்த்து நாக்கில் எழுதியும், அரிசி, கோதுமை, நெல் ஆகியவற்றில் குழந்தைகளின் கையை பிடித்தும் தமிழ் உயிர் எழுத்துக்களான ‘அ முதல் ஃ’ வரை எழுதி முன் பருவக்கல்வி ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் க.தமிழரசி, திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் செ.பாரிஜாதம், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story