கிருஷ்ணகிரியில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி
கிருஷ்ணகிரியில் நாள்தோறும் 4 மணி நேரம் வரையில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களாக தொடர் மின் வெட்டு காணப்படுகிறது. நாள்தோறும் 4 மணி நேரம் வரையில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக லேசான இடி-மின்னல் இருந்தால் கூட தொடர்ச்சியாக 2 முதல் 3 மணி நேரம் வரையில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் 10.30 மணி வரையில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. நேற்று மட்டும் காலை முதல் இரவு வரையில் 10 முறை மின்வெட்டு ஏற்பட்டது. இதில் 4 மணி நேரம் வரையில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கிருஷ்ணகிரியில் மின்சார பராமரிப்பு பணிகளுக்காக மாதம் ஒரு முறை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையில் மின்சாரம் நிறுத்துகிறார்கள். இது மட்டுமல்லாமல் அடிக்கடி பழுதான மின்கம்பங்கள் மாற்றுவதாகவும், மின்சார வயர்கள் மாற்றுவதாகவும் கூறி மின்சாரத்தை நிறுத்துகிறார்கள்.
இந்த நிலையில் சிறிய மழை, இடி-மின்னலுக்கு கூட மின்சாரம் உடனடியாக நிறுத்தப்படுகிறது. இது குறித்து மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டால் அலட்சியமாக பதில் கூறுகிறார்கள். மேலும் மின்வாரிய அலுவலகங்களை தொடர்பு கொண்டாலும் யாரும் போனை எடுப்பதில்லை. தொடர் மின் வெட்டால் குழந்தைகள், வயதான முதியவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே உயர் அதிகாரிகள் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story