வேப்பனப்பள்ளி பகுதியில் குழந்தை கடத்தல் வதந்தி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு


வேப்பனப்பள்ளி பகுதியில் குழந்தை கடத்தல் வதந்தி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 2 Jun 2018 4:45 AM IST (Updated: 2 Jun 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வந்து குழந்தைகளை கடத்தி செல்வதாக பரவி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வேப்பனப்பள்ளி

வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வந்து குழந்தைகளை கடத்தி செல்வதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வருகிறது. இதனால் சந்தேகப்படும்படி நபர்கள் சுற்றி திரிந்தால் அவர்களை பொதுமக்கள் தாக்கும் சம்பவங்களும் தமிழகத்தில் ஆங்காங்கே நடக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் குழந்தைகளை கடத்தும் கும்பல் புகுந்துள்ளதாக தகவல் பரவியது.

இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வேப்பனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் வேப்பனப்பள்ளி பகுதியில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, குழந்தை கடத்தல் தொடர்பாக பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும், சந்தேகப்படும்படி நபர்கள் சுற்றி திரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Next Story