கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக பெண் புகார்
நாகர்கோவிலில் கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக பெண் புகார் அளித்துள்ளார்.
நாகர்கோவில்,
ஏழ்மையில் இருக்கும் கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் பரபரப்பு புகாரை அளித்தார். இதுதொடர்பாக சில புகைப்படங்களையும் அவர் அளித்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். புகார் சம்பந்தமாக விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் அதிரடியாக உத்தரவிட்டார்.
நாகர்கோவிலைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் அந்த மாணவி 2 வாரங்களுக்கு முன்பு நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஒரு புகாரை கொடுத்தார்.
“தன்னுடைய தாயாருக்கும், ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருக்கிறது. இதை மூடி மறைப்பதற்காக என்னை அவருடைய கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க என் தாயார் முயற்சிக்கிறார். அவரை நான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதால் என்னை மிரட்டியதுடன், செல்போனை பறித்துச் சென்றுவிட்டனர்“ என்று புகாரில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அந்த மாணவியை அவருடைய தாயாருடன் அனுப்பி வைக்காமல், அவருடைய உறவுக்கார பெண்ணுடன் அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் அந்த மாணவியின் தாயார், நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் ஒரு புகாரை கொடுத்தார். அதில், அந்த மாணவி தொடர்பான ஆபாச புகைப்படங்களுடன் கூடிய சி.டி.யையும் இணைத்துக் கொடுத்தார். இதனால் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தனது மகள் குறித்து தாயாரே புகார் அளித்து இருப்பது போலீசாருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. புகாரில் மாணவியின் தாயார் கூறி இருப்பதாவது:-
எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் ஒரு கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள். மகன் 12-ம் வகுப்பு படித்து வருகிறான். எனது மகளுக்கு 19 வயது முடிந்த காரணத்தால் எங்கள் ஊரைச் சேர்ந்த எனது உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க எனது மகளின் சம்மதத்தின்பேரில் பெரியோர்கள் முடிவு செய்து, நிச்சயமும் செய்யப்பட்டது. பின்னர் திருமணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்த நிலையில் எனது மகள் வீட்டைவிட்டு சென்றுவிட்டாள்.
இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். இதுதொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் எனது மகளை மீட்டு விசாரித்தபோது, அவள் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறினாள். என்னிடமும் வெறுப்போடும் பேசினாள். எனது உறவுக்கார பெண்ணுடன் செல்ல விரும்புவதாக அவள் கூறியதை தொடர்ந்து போலீசார், 19 வயது முடிந்த எனது மகளுக்கு முடிவு எடுக்கும் உரிமை உள்ளது என்று கூறி அவளின் விருப்பப்படி அந்த பெண்ணுடன் அனுப்பி வைத்தனர்.
ஆனால், அந்த பெண்ணுக்கு உதவியாக ஒருவர் வந்திருந்தார். அவருக்கு பல வழக்குகளில் தொடர்பு இருக்கிறது. இந்த நிலையில் எனது மகள் தங்கி இருக்கும் வீட்டுக்கு சிலர் அடிக்கடி சென்று வருகின்றனர். எனவே நான் எனது உறவுக்காரப் பெண்ணை சந்தித்து எனது மகளை என்னிடம் பேச அனுமதியுங்கள், அவளை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர்கள் என்னை அவதூறாக பேசி, கொலை மிரட்டலும் விடுத்து விரட்டிவிட்டனர். நான் எனக்குத் தெரிந்த நபர்கள் மூலம் விசாரித்ததில் எனது உறவுக்காரப் பெண்ணும், அவருடைய உதவியாளரும் சேர்ந்து விபசார தொழில் நடத்தி வருவதாகவும், அவர்கள் எனது மகள் மற்றும் அவளுடன் கல்லூரியில் படிக்கும் சில மாணவிகளின் ஏழ்மையை பயன்படுத்தி, கல்லூரியில் கட்டணம் செலுத்த உதவுவதாக கூறி பாலியல் தொழிலுக்கு மாணவிகளை ஈடுபடுத்தி வருவதாக அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எனவே எனது மகளை அங்கிருந்து மீட்க பல வழிகளில் முயன்றும் முடியவில்லை.
இந்தநிலையில் எனக்கு எனது மகள் சம்பந்தமாக சில விரும்பத்தகாத புகைப்படங்கள் கிடைத்தன. அதன்மூலம் எனது மகளும், வேறு மாணவிகளும் எனது உறவுக்கார பெண் உள்ளிட்டோரால் விபசாரத்தில் ஈடுபடுவது எனக்கு தெரிய வந்தது. இதனால் வேதனை அடைந்த நான் எனது உறவுக்காரப் பெண்ணை மீண்டும் அணுகி, மகளை என்னுடன் அனுப்பிவிடு, நாங்கள் வேறு ஊருக்குச் சென்று எனது மகளை பாதுகாத்துக் கொள்கிறேன் என கேட்டதற்கு, அவர் ஒப்புக் கொள்ளாமல் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
எனது மகள் உள்பட வேறு சில பெண்களுடன் ஆண்கள் உல்லாசமாக இருப்பதுபோல் புகைப்படம் எடுத்து மிரட்டி அவர்களை இந்த தொழிலுக்கு உட்படுத்தி இருப்பார்கள் என சந்தேகமாக இருக்கிறது. அவர்களுக்கு பின்புலமாக சில பிரமுகர்களும், தொழில் அதிபர்களும், அரசியல்வாதிகளும் இருப்பார்கள் எனவும் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. எனவே எனது உறவுக்கார பெண்ணிடம் சிக்கியுள்ள எனது மகளையும் மற்ற மாணவிகளையும், பெண்களையும் மீட்க வேண்டும். என்னுடன் எனது மகளை சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Tags :
Next Story