கால்வாயில் குளித்தபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளியின் உடல் மீட்பு
மோர்தானா அணை கால்வாயில் குளித்தபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது.
குடியாத்தம்,
குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 31), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வள்ளி. நேற்று முன்தினம் சத்யராஜ் தட்டப்பாறை அருகே உள்ள மோர்தானா கால்வாயில் குளிக்க மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் சத்யராஜ் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து சத்யராஜின் மனைவி மற்றும் உறவினர்கள் மோர்தானா கால்வாய் பகுதிக்கு சென்று பார்த்தபோது, அவரது மோட்டார் சைக்கிள், காலணி மற்றும் துணிகள் இருந்துள்ளன. சத்யராஜ் குளித்து கொண்டிருந்த மோர்தானா கால்வாயை ஒட்டியபடி சுமார் 150 மீட்டருக்கு சுரங்க கால்வாய் உள்ளது. சத்யராஜ் சுரங்க கால்வாய்க்குள் சிக்கி கொண்டிருக்கலாம் என சந்தேகம் அடைந்த உறவினர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குடியாத்தம் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சத்யராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
நேற்று காலை 6 மணி அளவில் சுரங்க கால்வாய்க்கு அருகே சத்யராஜ் முட்புதருக்குள் சிக்கி இறந்து கிடப்பது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story