பெண்ணிடம் ரூ.5 லட்சம் அபேஸ் செய்த 5 பேர் கைது


பெண்ணிடம் ரூ.5 லட்சம் அபேஸ் செய்த 5 பேர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2018 4:59 AM IST (Updated: 2 Jun 2018 4:59 AM IST)
t-max-icont-min-icon

மலாடில் பெண்ணிடம் நூதன முறையில் ரூ.5 லட்சத்தை அபேஸ் செய்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை தீன்தோஷி பகுதியை சேர்ந்த பெண் ஆயிஷா கான் (வயது34). அண்மையில் இவருக்கு அறிமுகமான ஒரு கும்பல் தங்களுக்கு ரூ.5 லட்சத்துக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வேண்டும் என கேட்டு உள்ளது. அப்படி கொடுத்தால் அந்த தோகையுடன் 10 சதவீதம் சேர்த்து அதாவது ரூ.5 லட்சத்து ரூ.50 ஆயிரமாக 50, 100, 500 ரூபாய் நோட்டுகளாக தருவதாக தெரிவித்து உள்ளனர்.

இதை நம்பிய ஆயிஷா கான் தன்னிடம் மற்றும் தனது கணவரிடம் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மலாடில் உள்ள ஒரு ஓட்டலில், அந்த கும்பலை சேர்ந்த அரவிந்த் என்பவரை சந்தித்து கொடுத்து உள்ளார்.

அந்த பணத்தை வாங்கிய அவர், தான் கொண்டு வந்த பணம் காரில் இருப்பதாகவும், அதை எடுத்து விட்டு வருவதாக கூறி சென்றார். அதன்பின்னர் அவர் திரும்பி வரவே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆயிஷா கான் தனது கணவருடன் தின்தோஷி போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கும்பலை சேர்ந்த உமர்கான், பாருக் சேக், யூனுஸ் சேக், ராஜ் சேக், விஜய் சோம்நாத் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான அரவிந்தை வலைவீசி தேடிவருகின்றனர். 

Next Story