காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சித்தராமையா நியமனம்
காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சி எந்த பிரச்சினையும் இன்றி சுமுகமாக செயல்பட சில முக்கியமான முடிவுகளை நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி எடுத்துள்ளோம். அதன்படி இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களை ஒருங்கிணைத்து, ஒரு பொது செயல் திட்டத்தை உருவாக்கி மாநில மக்களுக்கு தெரியப்படுத்துவோம்.
கூட்டணி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு உருவாக்கப்படும். இந்த குழுவில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, நான் (வேணுகோபால்), ஜனதா தளம்(எஸ்) கட்சியின் பொதுச் செயலாளர் டேனிஷ்அலி ஆகியோர் இடம் பெறுவார்கள். இந்த குழுவின் தலைவராக சித்தராமையாவும், ஒருங்கிணைப்பாளராக டேனிஷ்அலியும் செயல்படுவார்கள். இந்த குழு மாதம் ஒரு முறை கூடி ஆலோசித்து, ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அவற்றை தீர்க்கும்.
இந்த கூட்டணியின் ஆட்சி சார்பாக கருத்துகளை தெரிவிக்க 2 செய்தித்தொடபாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஒருவர் காங்கிரசில் இருந்தும் இன்னொருவர் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்தும் நியமிக்கப்படுவார்கள். வாரிய தலைவர் பதவிகள் விஷயத்தில் மூன்றில் 2 பங்கு காங்கிரசும், மூன்றில் ஒரு பங்கை ஜனதா தளம்(எஸ்) கட்சியும் பகிர்ந்துகொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வாரிய தலைவர்கள் நியமனம் குறித்து ஒருங்கிணைப்பு குழுவில் முடிவு செய்யப்படும்.
குமாரசாமி தலைமையில் அமைந்துள்ள இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டு பதவி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்ய இரு கட்சி தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.
இந்த கூட்டணி அரசு வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையோடும், பொறுப்புடனும் செயல்பட்டு மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும். விவசாயிகள், இளைஞர்கள், பெண்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாநிலத்தில் அனைத்து மண்டலங்களும் பொருளாதார வளர்ச்சி அடைய கூட்டணி அரசு பாடுபடும். இந்த கூட்டணி அரசு சமூக நீதியையும், மத நல்லிணக்கத்தையும் உறுதி செய்யும். கர்நாடகத்தில் அனைத்து சமூக மக்களின் நன்மைக்காகவும் இந்த கூட்டணி அரசு செயல்படும்.
இவ்வாறு வேணுகோபால் கூறினார்.

Related Tags :
Next Story