குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் மறியல்


குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் மறியல்
x
தினத்தந்தி 3 Jun 2018 4:45 AM IST (Updated: 3 Jun 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் அருகே குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த தண்டலம் பகுதி மக்களுக்கு 3 வார காலமாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து மதுராந்தகம் - உத்திரமேரூர் சாலை தண்டலத்தில் அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பஸ்சை சிறை பிடித்து திடீர் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், மேல்மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜின்னாபாஷா ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மறியல் காரணமாக மதுராந்தகம் - உத்திரமேரூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story