தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான மேலும் ஒருவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
துப்பாக்கி சூட்டில் பலியான மேலும் ஒருவரின் உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஓட்டப்பிடாரம்,
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான மேலும் ஒருவரின் உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். அவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. இதில் 7 பேரின் உடல்கள் ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. 6 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் உள்ளது. ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்த 7 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து பிரேத பரிசோதனை முடிந்து சண்முகம், கார்த்திக், செல்வசேகர், காளியப்பன், கந்தையா ஆகியோரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவி சுனோலின் வெனிஸ்டா, தமிழரசன் ஆகியோரின் உடல்கள் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டன. ஆனால் அவர்களின் உடல்களை வாங்க குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியான ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலை ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த தொழிலாளியான தமிழரசன் (வயது 42) வீட்டிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் சென்று நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழரசனின் உடலை உறவினர்கள் வாங்கிக் கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலையில் தமிழக அரசின் நிதி உதவித்தொகையை வழங்குவதற்காக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் உள்ளிட்டவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
ஆஸ்பத்திரியில் வைத்து தமிழரசனின் தாயார் ராமலட்சுமியிடம் நிவாரண நிதியாக ரூ.20 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். பின்னர் தமிழரசனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் தலைமையில், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரராகவன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முத்துகருப்பன், ஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் தமிழரசனின் சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் அவரது உடலுக்கு குறுக்குசாலை, வேலாயுதபுரம், ராமச்சந்திராபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தமிழரசனின் உடல் ராமச்சந்திராபுரத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story