“எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்துகிறார்கள்” - முத்துக்கருப்பன் எம்.பி
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இணைந்து கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகிறார்கள் என்று முத்துக்கருப்பன் எம்.பி. கூறினார்.
நெல்லை,
முத்துக்கருப்பன் எம்.பி. நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்றவர்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 1989-ம் ஆண்டு முதல் எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்து பணியாற்றிவர். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா இருக்கும்போதே 3 முறை முதல்-அமைச்சர் பொறுப்பை வகித்தவர். மேலும் கட்சியில் முக்கிய பொறுப்பை வகித்தவர். இவர்கள் 2 பேரும் இணைந்து ஜெயலலிதாவிடம் பெற்ற பயிற்சியை வைத்து கட்சியையும், ஆட்சியையும் சிறப்பான முறையிலும், தெளிவாகவும் நடத்தி வருகிறார்கள்.
இந்த ஆட்சியை எப்படியாவது கலைக்கவேண்டும் என்று தி.மு.க.வினரும், இந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களும் எடுத்த முயற்சியை ஜெயலலிதாவிடம் பெற்ற பயிற்சியின் மூலம் உடைத்து எறிந்து விட்டனர். நெல்லை மாநகர் மாவட்டம் செயலாளர் இல்லாமல் 10 மாதமாக செயல்பட்டு வருகிறது. இருந்தாலும், கட்சியில் இருந்து தொண்டர்கள் யாரும் செல்லவில்லை. கட்சி ஒற்றுமையாக தான் உள்ளது.
மாவட்ட செயலாளர் நியமனம் குறித்து நான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பேசி உள்ளேன். விரைவில் மாவட்ட செயலாளர் நியமிக்கப்படுவார். நான் கட்சியில் 40 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். எனக்கு ஜெயலலிதா பல்வேறு பதவிகளையும், பொறுப்புகளையும், மாவட்ட செயலாளர், அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும் தந்தார். அவர் கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து உள்ளேன்.
எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். நான் எனது எம்.பி. நிதியில் மக்கள்நல திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதியை ஒதுக்கி வருகிறேன்.
காவிரி மேலாண்மை வாரியம் குறித்தும், கச்சத்தீவு பிரச்சினை குறித்தும் 13 முறை பாராளுமன்றத்தில் பேசி உள்ளேன். அப்படி இருந்தும் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க.வினர் இந்த பிரச்சினை குறித்து பேசவில்லை என்று கூறினார். உடனே நான் எனது பதவியை ராஜினாமா செய்தேன். உடனே முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் என்னிடம் பேசி அவசரப்பட வேண்டாம் என்று கூறினார்கள். இதனால் தான் ராஜினாமாவை கைவிட்டேன்.
நான் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களுக்காகவும் பாராளுமன்றத்திலும், நிலைக்குழுக்களிலும் பேசி உள்ளேன். கட்சி கொடுக்கின்ற பணியை நான் தொடர்ந்து செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story