பஸ்சுக்கு தீ வைத்ததில் காயம் அடைந்த பெண் சாவு: உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம்
மெஞ்ஞானபுரத்தில் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
நெல்லை,
ஸ்ரீவைகுண்டம் அருகே பஸ்சுக்கு தீ வைத்ததில் காயம் அடைந்த பெண் உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மெஞ்ஞானபுரத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு, தடியடி சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். இதனைக் கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 25-ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து நெல்லை நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் புதுபாலம் அருகே சென்றபோது, பஸ்சுக்கு சிலர் தீ வைத்தனர்.
இதில் மெஞ்ஞானபுரம் நவ்வலடிவிளையைச் சேர்ந்த சுடலை, அவருடைய மனைவி வள்ளியம்மாள் (வயது 63), காரைக்குடியை சேர்ந்த ஜெபக்குமார் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 31-ந்தேதி வள்ளியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டதில் இறந்த வள்ளியம்மாளின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
காயம் அடைந்த அவருடைய கணவருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, வள்ளியம்மாளின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து, நேற்று 3-வது நாளாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மெஞ்ஞானபுரம் பஜாரில் பொதுமக்கள், வணிகர்கள் நேற்று காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கவாஸ்கர், லட்சுமிபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆதிலிங்கம், ம.தி.மு.க. ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் இம்மானுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story