15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் 8-ந் தேதி அரசு பணியாளர்கள் உண்ணாவிரதம்


15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் 8-ந் தேதி அரசு பணியாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 3 Jun 2018 4:30 AM IST (Updated: 3 Jun 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று அரசு பணியாளர்கள் சங்க மத்திய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி,

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் பி.கே.சிவகுமார், சட்ட ஆலோசகர் பால்பாண்டியன், பொருளாளர் சாகுல் அமீது ஆகியோர் பேசினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு 21 மாத ஊதியக்குழு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஆட்குறைப்பு மற்றும் துறை குறைப்பு தொடர்பான ஆதிசேஷய்யா குழுவை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வருகிற 8-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. 

Next Story