ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல் அலுவலர்கள் நடவடிக்கை
பாலக்கோட்டில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மாம்பழங்களை ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைத்து அதனை விற்பனை செய்வதாகவும், அதனை சாப்பிடும் பொதுமக்களுக்கு வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழிக்கு புகார்கள் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் பாலக்கோடு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சேகர் மற்றும் அலுவலர்கள், பேரூராட்சி பணியாளர்களுடன் பாலக்கோடு பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாம்பழ கடைகள், மாம் பழ மண்டிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஆண்கள் மேல் நிலைப்பள்ளி பகுதியில் பாபு, முருகன் ஆகியோருக்கு சொந்தமான மாங்காய் கடை மற்றும் மண்டியில் சோதனை நடத்தினர்.
அப்போது இவர்களின் கடை, மண்டியில் ரசாயன கற்கள் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்தது தெரியவந்தது. இதையடுத்து பாபு, முருகன் ஆகியோரின் கடை, மண்டியில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ரசாயன கற்கள் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைத்தால் கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் எச்சரிக்கை விடுத்தார்.

Related Tags :
Next Story