ஏரிக்கரையில் சாலை சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
எசனை ஏரிக்கரையில் சாலை சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர்-ஆத்தூர் சாலை சீரமைக்கும் பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை சீரமைப்பு பணியானது தொடர்ச்சியாக நடைபெறாமல் வெங்கனூர்-உடும்பியம் இடையே சில மாதங்களாகவும், வேப்பந்தட்டை-கிருஷ்ணாபுரம் இடையே சில மாதங்களாகவும், எசனை- பெரம்பலூர் இடையே சில மாதங்களாகவும் சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் பெரம்பலூரிலிருந்து ஆத்தூர் செல்லும் வாகன ஓட்டிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் போக்கு வரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
பள்ளத்தில் விழுந்து விடுவோமோ...
குறிப்பாக வேப்பந்தட்டையிலிருந்து பெரம்பலூர் செல்லும் வழியில், எசனை ஏரிக்கரையில் சாலை குறுகலாக இருந்ததால் இதனை அகலப்படுத்தி சீரமைக்கும் பணி கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. தற்போது ஏற்கனவே இருந்த சாலையை பெயர்த்து விட்டு ஜல்லிக்கற்கள் கொட்டி நிரப்பியுள்ளனர். இதே நிலை கடந்த 2 மாதமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சறுக்கி விழுந்து விபத்துகள் ஏற்பட்டுள்ளது. ஏரிக்கரை மீது வாகனத்தில் பயணிக்கும் போது ஜல்லிக்கற்கள் சறுக்கி பள்ளத்தில் விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மேலும் ஜல்லிக்கற்கள் பரப்பிய சாலையில் பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்லும் போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் யாரும் செல்ல முடியாத அளவிற்கு புழுதி பறக்கிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணியை துரிதப்படுத்தி பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story