பெயிண்டர், அரிவாளால் வெட்டிக்கொலை முன்னாள் ஊராட்சி தலைவியின் கணவருக்கு வலைவீச்சு
கும்பகோணம் அருகே பெயிண்டர், அரிவாளால் வெட்டிக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக முன்னாள் ஊராட்சி தலைவியின் கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவிடைமருதுார்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை இஞ்சிக்கொல்லை பெரிய தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மகன் சூர்யா(வயது 28). பெயிண்டர். இவர் நேற்று மாலை தனது நண்பரான பத்மசாலிய தெருவை சேர்ந்த முருகன் வீட்டுக்கு சென்றார். அப்போது முருகனுக்கும், சூர்யாவுக்கும் இடையே தகராறு ஏற் பட்டது. இதனால் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டுக் கொண்டனர்.
முருகனின் எதிர் வீட்டில் வசிப்பவர் ரவி(45). இவருடைய மனைவி முருகேஸ்வரி, திருச்சேறை முன்னாள் ஊராட்சி தலைவி ஆவார். சூர்யாவும், முருகனும் சண்டையிட்டு கொண்டதை பார்த்த ரவி, அவர்களை சமாதானம் செய்தார். அப்போது மது போதையில் இருந்த சூர்யா, ரவியை தகாத வார்த்தை களால் திட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்த ரவி, தனது வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து வந்து சூர்யாவின் கழுத்தில் வெட்டினார். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சூர்யாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சூர்யாவின் உடலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story