மின் கட்டணத்தை செலுத்த புதிய செல்போன் செயலி அறிமுகம்


மின் கட்டணத்தை செலுத்த புதிய செல்போன் செயலி அறிமுகம்
x
தினத்தந்தி 3 Jun 2018 4:13 AM IST (Updated: 3 Jun 2018 4:13 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மின்பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர் தங்களது மின் கட்டணத்தை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூலமாக செலுத்தி வருகின்றனர்.

வேலூர்,

நுகர்வோர் தங்கள் மின்கட்டணத்தை எளிதான முறையில் செல்போன் மூலம் செலுத்த ஏதுவாக புதிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தச் சேவையை அனைத்து மின்நுகர்வோரும் பயன்படுத்தி மின்கட்டணம் செலுத்தலாம்.

மேலும் மின்நுகர்வோர் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின்வெட்டு மற்றும் மின்பாதைகளில் ஏற்படும் பழுதுகள் குறித்து உடனடியாக அந்தந்தப் பகுதி மின்வாரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்தத் தகவலை வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Next Story