குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
பாணாவரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பனப்பாக்கம்,
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தை சேர்ந்த பாணாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரங்காபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவதிப்பட்ட கிராம மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று விவசாய கிணற்றில் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் பாணாவரம் ஊராட்சி செயலாளர், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் மனு அளித்து உள்ளனர். ஆனால் குடிநீர் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரங்காபுரம் பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தற்போது தீமிதி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அருகே உள்ள கிராமத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். அவர்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் தண்ணீர் இன்றி அவதிப்பட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று காலை 11 மணி அளவில் பாணாவரத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குடிநீர் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாணாவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பனிடம் போனில் தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்சினை குறித்து பேசினார். அதற்கு அவர், இன்னும் 7 நாட்களில் ரங்காபுரம் பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு கிராம மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story