தேர்தல் அறிக்கையின் அம்சங்களின் அடிப்படையில் புதிய பட்ஜெட் தாக்கல்


தேர்தல் அறிக்கையின் அம்சங்களின் அடிப்படையில் புதிய பட்ஜெட் தாக்கல்
x
தினத்தந்தி 3 Jun 2018 5:19 AM IST (Updated: 3 Jun 2018 5:19 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் அறிக்கையின் அம்சங்களின் அடிப்படையில், புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் எனது தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். சித்தராமையா கடைசியாக தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியுள்ள அம்சங்களும் சேர்த்துக்கொள்ளப்படும்.

இதற்காக சட்டசபையின் கூட்டு கூட்டம் கூட்ட வேண்டியுள்ளது. இலாகாக்கள் ஒதுக்கீட்டில் தேவேகவுடா தலையிடவில்லை. ஆனால் சில ஊடகங்கள் அவருடைய தலையீட்டினால் தான் முக்கியமான இலாகாக்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளன. இது தவறானது. கூட்டணி ஆட்சியில் விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மையின் அடிப்படையில் தான் நாங்கள் இலாகாக்களை பகிர்ந்து கொண்டோம்.

நாங்கள் எந்த இலாகாவையும் கட்டாயப்படுத்தி பெறவில்லை. மின்சாரத்துறைக்கு எச்.டி.ரேவண்ணா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே போட்டி இருந்தது உண்மை தான். அதே போல் நிதித்துறையை பெறுவதிலும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) இடையே போட்டி இருந்தது. ஆனால் எங்களுக்குள் எந்த தகராறும் இல்லை. சுமுகமாகவே இலாகாக்களை பங்கிட்டு கொண்டோம். எங்கள் கட்சியில் யார் யாருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story