சென்னையில் விபசார வழக்கில் கைதானவர் டெலிவிஷன் நடிகை புதிய தகவல்கள்


சென்னையில் விபசார வழக்கில் கைதானவர் டெலிவிஷன் நடிகை புதிய தகவல்கள்
x
தினத்தந்தி 3 Jun 2018 5:32 AM IST (Updated: 3 Jun 2018 5:32 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் விபசார வழக்கில் கைதான பெண் தரகர், டெலிவிஷன் நடிகை என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் பகுதியில் உள்ள ஒரு சொகுசு பங்களா வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பிட்ட அந்த பங்களாவில் தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தியபோது அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது. இதையடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 3 பெண்கள் மீட்டனர்.

இதுதொடர்பாக விபசார தரகர்கள் போரூர் ராமகிருஷ்ணாநகரை சேர்ந்த சதீஷ்(30), விருகம்பாக்கம் ஆழ்வார்திருநகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த சங்கீதா(42) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மீட்கப்பட்ட 3 பெண்களும் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். விபசார தரகர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான விபசார தரகர் சங்கீதா ‘வாணி ராணி’ போன்ற பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும், சினிமாவிலும் துணை நடிகையாக நடித்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.

அவர் சினிமா ஆசைக்காட்டி ஏராளமான பெண்களை விபசாரத்தில் தள்ளியதாகவும் போலீசார் தெரிவித்தனர். பல்வேறு முக்கிய பிரமுகர்களோடு அவருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவர் மீது ஏற்கனவே வழக்குகள் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

Next Story