கோவில் கோபுரம் மீது மின்னல் தாக்கியது; 4 சாமி சிலைகள் சேதம்
ஓமலூர் அருகே கோவில் கோபுரம் மீது மின்னல் தாக்கியது. இதில் 4 சாமி சிலைகள் சேதம் அடைந்தன.
ஓமலூர்,
கோவில் கோபுரத்தின் சுவரிலும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. கோவிலில் மின்னல் தாக்கிய சம்பவம் பற்றி அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதையடுத்து மின்னல் தாக்கியதில் கோவில் அருகே உள்ள ஒரு மின்மாற்றியும் சேதம் அடைந்தது. இதனால் கிராமமே இருளில் மூழ்கியது. இது குறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறையினர் நேற்று கோவிலை பார்வையிட்டு சேத விவரங்களை அறிந்து கொண்டனர்.
அப்போது ஊர் பொதுமக்கள், வருவாய்த்துறையினரிடம், கோவில் கோபுரம் மின்னல் தாக்கியதில் சேதம் அடைந்து இருப்பதால் அரசு அறநிலையத்துறை மூலம் நிதி ஒதுக்கி, புதியதாக கோபுரம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கோவிலில் மின்னல் தாக்கியதால் நேற்று அங்கு பரிகார பூஜை நடந்தது.
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி ராக்கிப்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த ஊரில் பெரியாண்டிச்சியம்மனுக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் காடையாம்பட்டி, ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது ராக்கிப்பட்டி பெரியாண்டிச்சியம்மன் கோவில் கோபுரம் மீது மின்னல் தாக்கியது. இதில் கோபுரத்தில் இருந்த 4 சாமி சிலைகள் சேதம் அடைந்தன.
கோவில் கோபுரத்தின் சுவரிலும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. கோவிலில் மின்னல் தாக்கிய சம்பவம் பற்றி அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதையடுத்து மின்னல் தாக்கியதில் கோவில் அருகே உள்ள ஒரு மின்மாற்றியும் சேதம் அடைந்தது. இதனால் கிராமமே இருளில் மூழ்கியது. இது குறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறையினர் நேற்று கோவிலை பார்வையிட்டு சேத விவரங்களை அறிந்து கொண்டனர்.
அப்போது ஊர் பொதுமக்கள், வருவாய்த்துறையினரிடம், கோவில் கோபுரம் மின்னல் தாக்கியதில் சேதம் அடைந்து இருப்பதால் அரசு அறநிலையத்துறை மூலம் நிதி ஒதுக்கி, புதியதாக கோபுரம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கோவிலில் மின்னல் தாக்கியதால் நேற்று அங்கு பரிகார பூஜை நடந்தது.
Related Tags :
Next Story