தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அதிகாரி கைது


தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அதிகாரி கைது
x
தினத்தந்தி 3 Jun 2018 5:43 AM IST (Updated: 3 Jun 2018 5:43 AM IST)
t-max-icont-min-icon

ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அதிகாரி கைது செய்யப்பட்டார்.

புனே,

புனே அகுர்தி பகுதியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் அதிகாரியாக இருப்பவர் அவினாஷ் பாத்ரா. இவர் அலுவலக வளாகத்தில் உள்ள தோட்டத்தை பராமரிக்கும் பணியை கவனித்து வந்த ஒப்பந்ததாரரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டு மிரட்டல் விடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஒப்பந்ததாரர் இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.

இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் கொடுத்த யோசனையின்பேரில் ஒப்பந்ததாரர் சம்பவத்தன்று அவினாஷ் பாத்ராவிடம் அவரது அலுவலகத்தில் வைத்து ரசாயனபொடி தடவிய ரூ.20 ஆயிரத்தை கொடுத்தார். அந்த பணத்தை அவர் பெற்றுக் கொண்டபோது, அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவினாஷ் பாத்ராவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

Next Story