அரசு பள்ளியில் தீ விபத்து நாகர்கோவிலில்
நாகர்கோவிலில் அரசு பள்ளியில் தீ விபத்து நடந்தது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஏழகரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஓட்டு கட்டிடத்தில் அறிவியல் ஆய்வக கூடம் செயல்பட்டு வருகிறது. நேற்று விடுமுறைதினம் என்பதால் பள்ளி பூட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பகல் 12.30 மணி அளவில் பள்ளியின் ஆய்வக கட்டிடத்தின் உள்ளே இருந்து கரும்புகையாக வந்தது. இதை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அப்போது பள்ளி வளாகத்தில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. அதைத்தொடர்ந்து ஆய்வக கட்டிடத்தில் தீப்பிடித்து, ஓடுகள் உடைந்து உள்ளே விழுந்தன. அங்கு இருந்த மேஜை, பீரோ ஆகியவையும் தீப்பிடித்து எரிந்தன.
அதே சமயம் நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து கோட்டார் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு அதிகாரியிடம் கேட்ட போது, ‘அரசு பள்ளி ஆய்வகத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்’ என்றார். பள்ளி விடுமுறை தினத்தில் தீ விபத்து நடந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story