முல்லைப்பெரியாற்றில் மணல் அள்ளிய 4 பேர் கைது
உப்புக்கோட்டை அருகே முல்லைப்பெரியாற்றில் மணல் அள்ளிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
உப்புக்கோட்டை,
உப்புக்கோட்டை அருகே முல்லைப்பெரியாற்று படுகையில், அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதாக வீரபாண்டி போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது அங்கு மணல் அள்ளி கொண்டிருந்த உப்புக்கோட்டை அரசு கள்ளர் பள்ளி தெருவை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 48), அங்காள ஈஸ்வரி கோவில் தெருவை சேர்ந்த முருகன் (45), மேலத்தெருவை சேர்ந்த பாலமுருகன் (32), பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சின்னன் (45) ஆகிய 4 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story