திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண், தூக்குப்போட்டு தற்கொலை


திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண், தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 Jun 2018 3:15 AM IST (Updated: 4 Jun 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பல்லரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார்(வயது 33), விவசாயி. இவருக்கும் ஏனாதிமங்கலத்தை சேர்ந்த ராஜகோபால் மகள் சுபலட்சுமி (25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கவுதமன்(3) என்கிற மகன் உள்ளான். கடந்த சில மாதங்களாக கணவன்–மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கணவன்–மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. உடனே அய்யனார் தனது மாமனார் ராஜகோபாலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களது மகள் தன்னிடம் அடிக்கடி பிரச்சினை செய்து வருகிறார் என கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சுபலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த சுபலட்சுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்லரிபாளையத்துக்கு விரைந்து வந்து, சுபலட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதனிடையே தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுபலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ராஜகோபால் கொடுத்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சுபலட்சுமிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், போலீசார் திருக்கோவிலூர் சப்–கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.


Next Story