தமிழகம் முழுவதும் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்மானம்


தமிழகம் முழுவதும் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்மானம்
x
தினத்தந்தி 4 Jun 2018 3:45 AM IST (Updated: 4 Jun 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு வருகிற 8–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

பரமக்குடி,

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணை தலைவர் கோபிநாதன் தலைமை தாங்கினார்.

பொது செயலாளர் கோவிந்தன், பொருளாளர் பாஸ்கரன், மாநில துணை தலைவர் திருநீலகண்டபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வரதராஜன் வரவேற்று பேசினார். நிறுவன தலைவர் மாயவன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

கூட்டத்தில் பணி நிரவல் என்ற பெயரில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை 9 மற்றும் 10–ம் வகுப்புகளுக்கு இறக்கி அதன்மூலம் பட்டதாரி ஆசிரியர்களை உபரியாக்கி வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்வதை கல்வித்துறை உடனடியாக கைவிட வேண்டும். 3 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு அலவன்ஸ் வழங்க வேண்டும்.

வரலாறு பாடத்திற்கு வாரத்திற்கு 7 பாடவேளைகள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8–ந்தேதி தமிழகம் முழுவதும் அனைத்து முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கெண்டனர். மாநில செயலாளர் செல்வம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன், துணை தலைவர் வளவன்பாபு ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story