தூத்துக்குடி மாவட்டத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


தூத்துக்குடி மாவட்டத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2018 2:45 AM IST (Updated: 4 Jun 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

கோவில்பட்டி

கோவில்பட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள தமிழரசன் படிப்பகத்தில் நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கட்சியினர் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதே போல் புதுரோடு, இளையரசனேந்தல் பகுதிகளில் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

எட்டயபுரம் நடுவிற்பட்டி பட்டத்து விநாயகர் கோவில் முன்பு கட்சி கொடியேற்றி தி.மு.க.வினர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இதில் திரளான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் கல்யாண சுந்தரவிநாயகர் கோவில் தெருவில் நடந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடன்குடி

உடன்குடி பஸ்நிலையம் அருகில் அனிதா ரதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

ஆறுமுகநேரி

ஆறுமுகநேரியில் நடந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

காயல்பட்டினம் நகர தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

நாசரேத்

நாசரேத் நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு நாசரேத்-திருமறையூர் முதியோர் இல்லத்திலுள்ள முதியவர்களுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது.

ஆழ்வார்திருநகரி காமராஜர் சிலை அருகே பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. குரும்பூர் பஜாரில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story