ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது.
சென்னை,
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 26 வகையான பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. இந்த பணிகளுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு 3 கட்டங்களாக தேர்வு நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. மொத்தம் 782 காலிப்பணியிடங்களுக்கு கடந்த மார்ச் 6-ந் தேதி வரை விண்ணப்பிக்க தேர்வர்களை அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி, சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது.
நாடு முழுவதும் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 72 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த மையங்களில் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வேலூர் ஆகிய 5 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் 10-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. முதல் நிலை தேர்வு 200 மதிப்பெண்களுக்கு 2 பிரிவுகளாக நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையில் முதல் தாளும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இரண்டாம் தாளும் என தேர்வு நடந்தது.
காலையில் பொது அறிவு தொடர்பான வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. இந்த வினாத்தாளை எழுதிய தேர்வர்கள் மிக கடினமாக இருந்ததாக தெரிவித்தனர். அதேபோல், பிற்பகலில் திறனறிவு தொடர்பான வினாத்தாளை எழுதிய தேர்வர்கள் எளிதாக இருந்ததாக கூறினர்.
முதல்நிலை தேர்வு முடிவு அடுத்த மாதம் (ஜூலை) வெளியிடப்பட இருப்பதாகவும், அதற்கு அடுத்ததாக முதன்மை தேர்வு செப்டம்பர் 29-ந் தேதி நடைபெற இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Tags :
Next Story