கார் தொழிற்சாலை அதிகாரி வீட்டில் 140 பவுன் நகைகள்-ரூ.3½ லட்சம் மாயம்
மந்தைவெளியில் கார் தொழிற்சாலை அதிகாரி வீட்டில் 140 பவுன் நகைகள் மற்றும் ரூ.3½ லட்சம் பணம் மாயமானது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அடையார்,
சென்னை மந்தைவெளி தெற்கு கெனால் பேங்க் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ‘டி’ பிளாக்கில் முதல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஆனந்த்(வயது 48). இவர், பிரபல கார் தொழிற்சாலை ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த 140 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீடு முழுவதும் தேடிப்பார்த்தும் நகை, பணம் கிடைக்காததால் இது குறித்து பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது ஆனந்த் வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்படாமல் நகை, பணம் மாயமாகி இருப்பதாலும், 24 மணிநேரமும் அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் காவலாளிகள் பணியில் இருப்பதாலும் வெளி ஆட்கள் யாரும் அதை திருடி இருக்க வாய்ப்பு இல்லை என போலீசார் கருதுகின்றனர்.
எனவே வீட்டின் உரிமையாளர் ஆனந்துக்கு நன்கு அறிமுகமான நபரோ அல்லது அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் உறவினர்களோ அல்லது வீட்டு வேலை செய்பவர்களோ இந்த திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுதொடர்பாக அவரது வீட்டில் கடந்த 10 வருடங்களாக வீட்டு வேலைகள் செய்து வரும் வேலைக்கார பெண்ணிடம் போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்து அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் தொட ர் ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story