மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. ஆறு நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியின் காரணமாக பொதுமக்கள், வனப்பகுதிக்குள் செல்ல கூடாது. ஆற்றில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான அய்யனார் கோவில். ராஜாம்பாறை, கோட்டை மலை, பிறாவடியார் உள்ளிட்ட 11 பீட்டுகளில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.
6 நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியில் வனவர் குருசாமி, வன ஊழியர், தன்னார்வலர், மலைவாழ் மக்கள் என 4 நபர்கள் அடங்கிய குழு ராஜபாளையம், தேவதானம் சாஸ்தா கோவில் வனப்பகுதிகளுக்கு சென்று புலிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் முதல் 3 நாட்கள் புலிகள் கால் தடங்கள், எச்சங்கள், உள்ளிட்டவைகளையும், மீதமுள்ள நாட்களில் புலிகளின் நேர்கோட்டு பாதையினையும் ஆய்வு செய்து புலிகளின் எண்ணிக்கை குறித்து வனச்சரகர் அலுவலகத்தில் அறிக்கையை வழங்குவார்கள்.