பாளையங்கோட்டையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பாளையங்கோட்டையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2018 2:30 AM IST (Updated: 4 Jun 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நெல்லை,

பாளையங்கோட்டையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அப்துல் அஜீஸ் தலைமை தாங்கினார். மீனவர் அணி செயலாளர் தாமஸ், மகளிர் அணி செயலாளர் அனிதா, மாணவர் அணி செயலாளர் நயினார், பொருளாளர் சாந்தி ஜாபர், செய்தி தொடர்பாளர் ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பேச்சிமுத்து, மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமூக விரோதிகள் என்று கூறிய நடிகர் ரஜினிகாந்தை கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொச்சைப்படுத்திய ரஜினிகாந்தை கண்டித்து அவருடைய வீட்டை முற்றுகையிட்ட கட்சியின் மாநில தலைவர் சரீப் உள்ளிட்ட கட்சியினரை கைது செய்து சிறையில் அடைத்ததை கண்டித்தும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு ஆகியோரை கைது செய்ததை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோ‌ஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. மாவட்ட நிர்வாகி விஜயகுமார் பாக்கியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி நிர்வாகி ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கரிசல்சுரேஷ், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில செய்தி தொடர்பாளர் சண்முகசுதாகர், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.


Next Story