நெல்லை அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


நெல்லை அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Jun 2018 2:00 AM IST (Updated: 4 Jun 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

நெல்லை,

நெல்லை அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–

தங்க சங்கிலி பறிப்பு

நெல்லை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பாபுராவ். இவருடைய மனைவி சரோஜா (வயது 52). இவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அவர் காற்றுக்காக வீட்டின் கதவையும், ஜன்னலையும் திறந்து வைத்து இருந்தார்.

அப்போது, மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் அங்கு இருந்த 2 விலை உயர்ந்த செல்போன்களையும் திருடிவிட்டு, சரோஜா கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். கழுத்தில் கிடந்த சங்கிலியை மர்ம நபர்கள் இழுத்த போது சரோஜா கழுத்தில் வலி ஏற்பட்டது. உடனே அவர் திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தங்க சங்கிலியுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

வலைவீச்சு

இதுகுறித்து சரோஜா, சிவந்திப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story