இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில் கைதான முபாரக்கை கோவைக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை


இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில் கைதான முபாரக்கை கோவைக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 4 Jun 2018 5:00 AM IST (Updated: 4 Jun 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் கைதான முபாரக்கை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

கோவை,

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் (வயது38) கடந்த 2016–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22–ந் தேதி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த முபாரக் (35), ரத்தினபுரியை சேர்ந்த சதாம்உசேன் (27), உக்கடத்தை சேர்ந்த சுபைர்(33), போத்தனூரை சேர்ந்த அபுதாகீர்(32) ஆகிய 4 பேரை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வுபிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் பின்னணியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 31–ந் தேதி இந்த வழக்கு தேசிய புலானய்வு முகமை பிரிவுக்கு(என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதன்தொடர்ச்சியாக இவ்வழக்கில் கைதான 4 பேர் வீடுகள் மற்றும் மேலும் சில வாலிபர்களின் வீடுகளில் சோதனை நடந்தது. அப்போது அந்த வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள், செல்போன்கள், சி.டி.க்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்த சோதனைக்கு சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள், சோதனை என்ற பெயரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அத்துமீறி நடப்பதாக பிரதமர் அலுவலகத்துக்கும் புகார் மனு அனுப்பினர்.

இந்த நிலையில் வழக்கு தொடர்பாக முபாரக்கை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதி காரிகள் சென்னை பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் மனு செய்தனர். அதன் அடிப்படையில் முபாரக்கிடம் 7 நாள் காவலில் விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு என்.ஐ.ஏ.வுக்கு அனுமதி அளித்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 31–ந் தேதி முதல் முபாரக்கை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். முபாரக்கை கிண்டியில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து அவரை நேற்று காலை கோவைக்கு அழைத்து வந்தனர். அவரை, சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஒரு வழிபாட்டுதலம் வளாகம் மற்றும் துடியலூர் பகுதிகளுக்கு அழைத்து சென்று

அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இன்றும் (திங்கட்கிழமை) முபாரக்கிடம் கோவையில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.


Next Story