கறம்பக்குடி, பாடாலூரில் விபத்து: தம்பதி உள்பட 4 பேர் பலி
கறம்பக்குடி மற்றும் பாடாலூரில் நடந்த விபத்தில் தம்பதி உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா, கல்லாக்கோட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 52). இவரது மனைவி பத்மா(42). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் கறம்பக்குடி அருகே உள்ள நரங்கியப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல விழாவுக்கு நேற்று மொபட்டில் சென்றனர்.
கறம்பக்குடி சடையன் தெரு விலக்கு சாலை அருகே சென்றபோது, எதிரே கறம்பக்குடியில் இருந்து கந்தர்வகோட்டை நோக்கி சென்ற அரசு டவுன் பஸ் மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பத்மா படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயமடைந்த பத்மாவை மீட்டு சிகிச்சைக்காக கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பத்மாவும் பரிதாபமாக இறந்தார்.
இதைத்தொடர்ந்து கறம்பக்குடி போலீசார் சுப்பிரமணியன் மற்றும் பத்மாவின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் மூக்கம்பட்டியை சேர்ந்த துரைராஜ் (45) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் இறந்த சுப்பிரமணியன், பத்மாவின் உடல்களை பார்த்து அவர்களுடைய 3 மகள்களும் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதேபோன்று பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் நடந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். அதன் விவரம் வருமாறு;-
சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் பாலு. இவருடைய மகன் மணிகண்டன்(வயது 25). இவர் அதே பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வந்தார். மணிகண்டன், தன்னுடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த மணி(24), விஸ்வநாதன் மகன் நவநீதன்(27), பாபு மகன் பாஸ்கர்(22), ராதா மகன் கவுதம்(27) ஆகியோருடன் சேர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி அவர்கள் நேற்று முன்தினம் இரவு ஆலந்தூரில் இருந்து ஒரு காரில் புறப்பட்டனர். காரை கவுதம் ஓட்டினார். நேற்று அதிகாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள இரூரில் வந்தபோது கவுதமின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு சாலையில் ஓடியது.
அப்போது முன்னால் சென்ற ஒரு வாகனம் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த மணிகண்டன், மணி ஆகியோர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கவுதம், பாஸ்கர், நவநீதன் ஆகியோர் படுகாயமடைந்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபய குரல் எழுப்பினர்.
அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் விபத்து குறித்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் வாகன ஓட்டிகள், படுகாயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த நவநீதன், பாஸ்கர், கவுதம் ஆகியோரை காரில் இருந்து மீட்டு, சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் உயிரிழந்த மணிகண்டன், மணி ஆகியோரின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மணி பஞ்சர் கடை நடத்தி வந்ததும், படுகாயமடைந்த நவநீதன் தச்சு தொழிலும், பாஸ்கர் நான்கு சக்கர வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. சமயபுரம் கோவிலுக்கு சாமி கும்பிட நண்பர்களுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கி 2 வாலிபர்கள் பலியான சம்பவம், அவர்களுடைய பெற்றோர், உறவினர் களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story