சிவசேனா பெண் பிரமுகரின் 7 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை வாலிபர் கைது


சிவசேனா பெண் பிரமுகரின் 7 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 Jun 2018 4:39 AM IST (Updated: 4 Jun 2018 4:39 AM IST)
t-max-icont-min-icon

சிவசேனா பெண் பிரமுகரின்7 வயதுமகளை பாலியல் வன்கொடுமை செய்து,கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

சிவசேனா பெண் பிரமுகரின்7 வயதுமகளை பாலியல் வன்கொடுமை செய்து,கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமி கொலை

ராய்காட் மாவட்டம் உனே பகுதியை சேர்ந்த சிவசேனா பெண் பிரமுகர் ஒருவரின் 7 வயது மகள் கடந்த சில தினங்களுக்கு முன் குளிர்பானம் வாங்குவதற்காக கடைக்கு சென்றாள். அதன்பின்னர் அவள் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில், அந்த பகுதியில் உள்ள ஆள் இல்லாத ஒரு வீட்டுக்குள் பிணமாக மீட்கப்பட்டாள்.

போலீசார் அவளது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், அவள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, மூச்சை திணறடித்து கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

வாலிபர் கைது

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி குறித்து விசாரணை நடத்தினார்கள். செல்போன் அலை வரிசையை ஆராய்ந்த போது, சம்பவத்தன்று கொலை நடந்த இடத்தில் மான்காவ் வாவே கிராமத்தை சேர்ந்த சாகர் கர்காரே(வயது22) என்ற வாலிபர் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். இதில் சாகர் கர்காரே தான், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story