போக்குவரத்து நெரிசலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திருக்கழுக்குன்றத்தில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கல்பாக்கம்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் நகரில் வரலாற்று சிறப்புமிக்க வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஊர் தாலுகா தலைமை இடமாக உள்ளது. மேலும் இங்கு நீதிமன்றம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மார்க்கெட் உள்ளிட்டவைகள் அமைந்து உள்ளதால் எப்போதும் இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.
புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வெங்கப்பாக்கம், ஆரம்பாக்கம் மற்றும் கல்பாக்கம் அணுசக்தி துறை ஊழியர் குடியிருப்பு, அணுபுரம் ஊழியர் குடியிருப்பு உள்பட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள் திருக்கழுக்குன்றம் வழியாக செங்கல்பட்டு சென்னை உள்பட வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.
திருக்கழுக்குன்றம் மார்க்கெட் பகுதியில் இருந்து பஸ் நிலையம் வரை உள்ள குறுகலான சாலையில் இருபுறமும் நடைபாதையில் ஏராளமான சிறுகடைகள் உள்ளன. அதேபோல சன்னதி தெருவிலும் சாலையோரம் பழக்கடைகள், பூக்கடைகள் காணப்படுகிறது.
இதனால் பிரதான சாலையிலும், சன்னதி தெருவிலும் கடும் போக்குவரத்து நெரிசல் நீண்ட காலமாக உள்ளது. குறிப்பாக அலுவலக நேரங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் செல்லும் பள்ளி குழந்தைகள், நோயாளிகள், பெண்கள் உள்பட பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.
மேலும் திடீர் தீ விபத்து மற்றும் எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டால் அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் இந்த சாலையை எளிதில் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story