கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம்
x
தினத்தந்தி 5 Jun 2018 3:45 AM IST (Updated: 5 Jun 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைளை வலியுறுத்தி நேற்று கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். தலைவர் இன்னாசிமுத்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:–

சத்துணவு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த 2016–ம் ஆண்டு அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நீக்கப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் இது தற்போது வரை அமல்படுத்தப்பட வில்லை. இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் பணிக்கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்களுக்கு 9 மாதங்கள் மகப்பேறு விடுமுறையாக வழங்கி அரசாணை பிறப்பிக்க வேண்டும். தற்போது மாணவர்களுக்கு உணவு தயாரிக்க வழங்கப்படும் மானியத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story