துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். அப்போது தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது;-
சட்டத்தை மீறி சொந்த மக்களை சுட்டு கொல்ல உத்தரவிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர்களை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும். தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அல்லது சட்டபேரவையில் சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும்.
துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு ஊரின் மையப்பகுதியில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும். பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி அரசு வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். மேலும் அவர்கள் சிகிச்சை செலவை அரசு ஏற்க வேண்டும். கால்களை இழந்தவர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறி இருந்தனர்.
சேர்வைக்காரன்மடம் கிராம விவசாயிகள் அபிவிருத்தி சங்கம் சார்பில் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்தில் சுமார் 7 குளங்கள் உள்ளன. ஸ்ரீவைகுண்டம் வடகால் தண்ணீர் கட்டயம் புதூர் பாசன வாய்க்கால் வழியாக தான் மற்ற குளங்களுக்கு செல்ல வேண்டும்.
தற்போது அந்த கட்டயம் புதூர் பாசன வாய்க்காலில் அமைக்கப்பட்டு உள்ள ஷட்டர்களுக்கு மேலே 3 அடி உயரத்தில் இரும்பு தடுப்பு வைக்கப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. இதனால் மற்ற குளங்களுக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்து உள்ளனர். எனவே அந்த ஷட்டர் மேல் வைக்கப்பட்டு உள்ள இரும்பு தடுப்புகளை அகற்ற வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
மதசார்பற்ற ஜனதா தளம் மாநில துணை தலைவர் சொக்கலிங்கம் கொடுத்த மனுவில், மாவட்ட கலெக்டர் அறிவிப்பை தொடர்ந்து கடந்த ஆண்டு சீமை கருவேல மரங்கள் ஓரளவுக்கு அகற்றப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கையால் சாலையில் இருபுறம், குளம், குட்டை, ஆறு மற்றும் ஓடைகளில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. ஆனால் தற்போது அதே இடங்களில் சீமை கருவேல மரங்கள் முளைத்து உள்ளன. அந்த சீமை கருவேல மரங்களை மழை காலத்துக்கு முன்பு அகற்ற வேண்டும் என்று கூறி இருந்தார்.

Related Tags :
Next Story