அடுத்தவர் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போலீஸ் ஏட்டுக்கு தர்மஅடி ஆயுதப்படைக்கு இடமாற்றம்
தூத்துக்குடியில் நள்ளிரவில் ஒரு வீட்டின் ஜன்னல் கதவை திறந்து எட்டிப்பார்த்த போலீஸ் ஏட்டுவை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த ஏட்டுவை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா நடவடிக்கை எடுத்துள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு வீட்டின் ஜன்னல் கதவை திறந்து மர்மநபர் ஒருவர் உள்ளே எட்டி பார்த்தவாறு இருந்தார். சிறிது நேரத்தில் வீட்டின் உரிமையாளர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். திருடனாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், அவர் வீட்டிற்கு வெளியே வந்து ‘திருடன்...திருடன்...‘ என்று கூச்சலிட்டு உள்ளார். உடனே அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அந்த பகுதிக்கு திரண்டு சென்றனர்.
இதை பார்த்த பேண்ட், சர்ட் அணிந்திருந்த அந்த மர்ம நபர் தப்பி ஓடினார். ஆனால், அனைவரும் பின்தொடர்ந்து ஓடிச்சென்று அந்த மர்மநபரை பிடித்தனர். அவரிடம் கூடியிருந்த பொதுமக்கள் யார் நீ...என திரும்ப திரும்ப கேட்டனர்.
அந்த நபர் தப்பி ஓடுவதிலேயே குறியாக இருந்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இந்த தர்மஅடி தாங்க முடியாத அந்த நபர், நான் போலீஸ் ஏட்டு என்று கூறி உள்ளார். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், போலீஸ் உடை இல்லாமல் எதற்கு இங்கு வந்தாய்? வீட்டுக்குள் எட்டி பார்த்து ஏன்? என கேட்டபோது, மீண்டும் அவர் மவுனம் சாதித்து உள்ளார்.
சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவரை தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கு இருந்த போலீசார் நடத்தி விசாரணையில் அவர், தூத்துக்குடி அருகில் உள்ள முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் கலியுகவரதன் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர், கோவில்பட்டியில் குடும்பத்துடன் குடியிருந்து வருவதும், பெரும்பாலான நாட்கள் அவர் கோவில்பட்டியில் இருந்து முத்தையாபுரத்துக்கு வந்து பணியாற்றி விட்டு வீட்டுக்கு சென்று விடுவதும், சில நாட்கள் பணி நிமித்தமாக போலீஸ் நிலையத்தில் தங்கி இருந்து வருவதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரி முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில், சம்மந்தப்பட்ட வீட்டுக்காரரிடம் போலீஸ் ஏட்டு மன்னிப்பு கேட்டாராம். இதை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்காமல் பொதுமக்கள் திரும்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்திய அவர், சம்பந்தப்பட்ட போலீஸ் ஏட்டு கலியுகவரதனை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story