அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அறை அடங்கிய கட்டிடத்திற்கு பூட்டு
மணப்பாறை அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் அறை அடங்கிய கட்டிடத்திற்கு மர்ம நபர்கள் பூட்டு போட்டனர்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டியில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பொய்கைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணியில் இருந்த தலைமை ஆசிரியர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் பணிமாறுதலாகி சென்று விட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வருடங்களாக உதவி தலைமை ஆசிரியர் தான் அந்தப் பொறுப்பில் உள்ளார். மேலும் பள்ளியில் 22 ஆசிரியர்களுக்கு 15 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் வெகுவாக குறைந்து விட்டது. மேலும் மாணவ- மாணவிகளின் கல்வித்தரமும் குறைந்து விட்டது. இதனால் வேதனை அடைந்த மக்கள் இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
இந்நிலையில் போராட்டம் நடத்துவதற்காக பொதுமக்கள் பள்ளியின் முன் கூடினர். அப்போது பள்ளியில் தலைமை ஆசிரியர் அறை மற்றும் ஆய்வகங்கள் உள்ளடங்கிய தனி கட்டிடத்தை மர்ம நபர்கள் யாரோ பூட்டு போட்டு பூட்டி விட்டனர். இதனால் மாணவ-மாணவிகள் ஆய்வகத்திற்கும், தலைமை ஆசிரியர் (பொறுப்பு) அவரது அறைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் கந்தசாமி, கிராம நிர்வாக அதிகாரி மகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கூடியிருந்த மக்களிடம் கேட்டறிந்த பின் இதுபற்றிய தகவலை போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் மணப்பாறை இன்ஸ்பெக்டர் கென்னடி, சப்-இன்ஸ்பெக்டர் ரூபினி, தனிப்பிரிவு ஏட்டு பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூட்டு போட்டது யார்? என்று கேட்டனர். ஆனால் அங்கிருந்த மக்கள் நாங்கள் யாரும் பூட்டு போடவில்லை என்று கூறியதை அடுத்து போலீசார் அந்த பூட்டை உடைத்து கதவை திறந்து வைத்தனர்.
மேலும் பூட்டு போட்டவர் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவ-மாணவிகளின் கல்வித்தரம் குறைந்திருப்பதாக கூறி சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை வாங்கிக் கொண்டு வேறு பள்ளியில் சேர்த்து விட்டனர். இதனால் இப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. எனவே இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story