சாலை மறியலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் 12 பேர் மீது வழக்கு
சாலை மறியலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூத்தாநல்லூர்,
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் ஆட்டோக்களை நிறுத்துவது தொடர்பாக 2 தரப்பை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பு ஆட்டோ டிரைவர்கள் கொரடாச்சேரியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியல் காரணமாக தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
12 பேர் மீது வழக்கு
இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்க தலைவர் முருகேசன் உட்பட ஆட்டோ டிரைவர்கள் 12 பேர் மீது கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story