விதிமீறும் வாகன ஓட்டிகளிடம் ஸ்வைப் கருவி மூலம் அபராதம் வசூல் செய்யும் முறை திருச்சியில் அறிமுகம்
விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் ஸ்வைப் கருவி மூலம் அபராதம் வசூல் செய்யும் முறையை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார்.
திருச்சி,
தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்வதோடு, ‘ஸ்பாட் பைன்‘ எனப்படும் நிகழ்விடத்திலேயே அபராதம் வசூலிக்கும் முறை அமலில் உள்ளது. இந்தநிலையில் பணமற்ற பரிவர்த்தனையை ஏற்படுத்தும் வகையில், ஸ்வைப் கருவி மூலம் அபராதம் வசூலிக்கும் நடைமுறை கடந்த மாதம் 10-ந் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. இதேபோல் இந்த நடைமுறை திருச்சியிலும் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கமிஷனர் அமல்ராஜ், ஸ்வைப் கருவி மூலம் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை தொடங்கி வைத்தார். பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. முதல்கட்டமாக திருச்சி மாநகரில் 30 ஸ்வைப் கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன. நாளடைவில் தேவைக்கேற்ப ஸ்வைப் கருவிகளை கூடுதலாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இது குறித்து போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறியதாவது:-
முன்பெல்லாம் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறும்போது, அவர்களிடம் நேரடியாக அபராதத்தொகை வசூலிக்கப்படும். பணம் இல்லாதவர்கள் போலீசாரிடம் ரசீதை பெற்று கொண்டு கோர்ட்டில் சென்று பணத்தை செலுத்தி வந்தனர். தற்போது விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் கிரடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்தி அபராதம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கார்டுகள் இல்லாதவர்கள் பணமாகவும், நீதிமன்றத்திலும் அபராதம் செலுத்த முடியும். ஆனால் 3 மாதம் வரை மட்டுமே இவ்வாறு பணம் பெறப்படும். அதன்பிறகு போக்குவரத்து விதிகளை மீறுவோர் அனைவரும் கார்டுகள் மூலமாக தான் அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும். இதன் மூலம் போலீசார் மீது கூறப்படும் புகார்கள் குறையும்.
கடந்த ஆண்டில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 2 லட்சத்து 7 ஆயிரத்து 458 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதன் மூலம் ரூ.2 கோடியே 97 லட்சத்து 93 ஆயிரத்து 650 அபராத தொகை வசூல் செய்யப்பட்டது. இதேபோல் இந்த ஆண்டு கடந்த 31-ந் தேதி வரை 1 லட்சத்து 37 ஆயிரத்து 327 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதன் மூலம் ரூ.1 கோடியே 56 லட்சத்து 57 ஆயிரத்து 800 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 331 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டது, இதில் 50 பேர் விபத்தில் இறந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 274 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 30 பேர் இறந்துள்ளனர். ஆகவே விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவாக உள்ளது. பழைய பால்பண்ணை அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெங்காய மண்டி வளாகத்தையொட்டி உள்ள அணுகுசாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக லாரிகளை நிறுத்தக்கூடாது. அவ்வாறு நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கோர்ட்டு எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானா, சிந்தாமணி அண்ணாசிலை ரவுண்டானா ஆகியவற்றின் சுற்றளவுகளை சற்று குறைக்க மாநகராட்சியில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் நிஷா, மயில்வாகனன், போலீஸ் உதவி கமிஷனர் விக்னேஷ்வரன், பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் ரமேஷ், துணை பொது மேலாளர் விஜயராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story