மின் நிறுவனத்தில் பணியிடங்கள்!


மின் நிறுவனத்தில் பணியிடங்கள்!
x
தினத்தந்தி 5 Jun 2018 11:01 AM IST (Updated: 5 Jun 2018 11:01 AM IST)
t-max-icont-min-icon

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பவர் சிஸ்டம் ஆபரேசன் கார்ப்பரேசன் லிமிடெட்.

‘போசோகோ’ (POSOCO) என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த நிறுவனம் மத்திய மின்சாரத் துறையின் கீழ் செயல்படுகிறது. மின்சார அமைப்பின் செயல் முறைகள், பாதுகாப்பு, பொருளாதார திட்டங்கள், உள்ளிட்டவற்றில் இந்த நிறுவனம் பங்களிப்பு செய்கிறது.

தற்போது இந்த நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. எலக்ட்ரிக்கல் பிரிவில் 45 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 19 இடங்களும் உள்ளன. மொத்தம் 64 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த இரு பிரிவில் என்ஜினீயரிங் படித்து, 2018 கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 31-7-2018-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கேட் மதிப்பெண்கள் 85 சதவீதத்திற்கும், குழு கலந்துரையாடலுக்கு 3 சதவீதமும், நேர்காணலுக்கு 12 சதவீதமும் மதிப்பெண் வழங்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். நல்ல உடல்தகுதியை விண்ணப்பதாரர் பெற்றிருக்கிறாரா என்பது பரிசோதிக்கப்படும். விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 27-6-2018-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.posoco.in. என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

Next Story