நாகர்கோவிலில் நூலக இடத்தை வாடகைக்கு விட எதிர்ப்பு: வெள்ளிமலை ஆசிரம தலைவர் திடீர் போராட்டம்
நாகர்கோவிலில் நூலக இடத்தை வாடகைக்கு விடக்கூடாது என வலியுறுத்தி வெள்ளிமலை ஆசிரம தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாகர்கோவில்,
வெள்ளிமலை சுவாமி விவேகானந்தர் ஆசிரம தலைவரும், இந்து கோவில் கூட்டமைப்பு தலைவருமான் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், அமைப்பாளர் ஸ்ரீபதிராஜ் உள்ளிட்டோர் நேற்று நாகர்கோவில் பாலமோர் ரோட்டில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீசித்ரா நூலகத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் நூலக இடத்தை வியாபார நோக்குக்காக வாடகைக்கு விடப்படுவதை கண்டிப்பதாகக்கூறி அந்த நூலகம் முன் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் குறித்து சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் கூறியதாவது:–
குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகத்தின்கீழ் (இந்து சமய அறநிலையத்துறை) செயல்படும் ஸ்ரீசித்ரா இந்துமத நூலகம் குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருக்கும்போது இந்து சமய மக்கள், இந்து சமயம் தொடர்பான நூல்களை கற்றறிந்து கொள்வதற்காகவும், இந்து சமயம் தொடர்பான கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் ஏதுவாகவும், அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீசித்திரை திருநாள் பாலராமவர்மா மகாராஜாவால் சுமார் 50 சென்ட் இடத்தில் இந்த நூலகம் நிறுவப்பட்டது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நூல்நிலையம் திறக்கப்படவில்லை என்பதும், கூட்ட அரங்கை ஆன்மிக நிகழ்ச்சிக்கு கேட்டால் கொடுக்காமல் சுயலாபத்துக்காக தரைப்பகுதியை வாடகைக்கு கொடுத்தவருக்கே மொத்த பகுதியையும் வியாபார நோக்கோடு கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. இதை இந்துக்கோவில் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.
எனவே ஸ்ரீசித்ரா நூலகத்தை உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல்நிலைய வளாகத்தில் இருக்கிற ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கூட்ட அரங்கில் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். நூலக இடத்தை வாடகைக்கு விடக்கூடாது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது தவறான தகவலை வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்துகிறேன்.
இவ்வாறு சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் சுவாமிகள் கூறினார்.
இதுபற்றிய தகவல் அறிந்த வடசேரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அனில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பாளர் ஜீவானந்தம் விரைந்து வந்து, சுவாமி சைதன்யானந்தஜி மகராஜிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ஸ்ரீசித்ரா நூலகம் கடந்த 5 மாதங்களாக திறக்கப்பட்டு வருகிறது. அதற்கு தேவையான ஊழியர்கள் இல்லை. அதை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்தான் நியமிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நூலகத்தை தொடர்ந்து நடத்தவும் நடவடிக்கை எடுக்கிறோம். அதேபோல் வருவாய் வரக்கூடிய இனங்களை ரத்து செய்ய வேண்டும் என்றால் ஆணையர்தான் ரத்து செய்ய வேண்டும். அவருக்குத்தான் அந்த அதிகாரம் உண்டு. நீங்கள் உங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுங்கள். நாங்கள் அதை ஆணையருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினார்.
இதையடுத்து சைதன்யானந்தஜி மகராஜ் மற்றும் அவருடன் போராட்டம் நடத்தியவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். அதை இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பாளர் ஜீவானந்தம் பெற்று கொண்டார்.
அதன்பின்னர், சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் மற்றும் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story