தஞ்சை பெரிய கோவில் கேரளாந்தகன் கோபுரத்தில் மின்னல் தாக்கியது சிற்பம் உடைந்து சேதமானது
தஞ்சையில் நேற்று பெய்த பலத்த மழையின்போது பெரிய கோவில் கேரளாந்தகன் கோபுரத்தில் மின்னல் தாக்கியது. இதனால் சிற்பம் உடைந்து சேதமானது.
தஞ்சாவூர்,
மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து தமிழினத்தின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து இருக்கிறது. தனித்துவமான கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோவிலின் முகப்பில் கேரளாந்தகன் கோபுரமும், அடுத்ததாக ராஜராஜன் கோபுரமும் உள்ளது. பெருவுடையார் சன்னதிக்கு மேல் பகுதியில் 216 அடி உயர கோபுரம், 13 தளங்களுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
கேரளாந்தகன் கோபுரத்தின் முதல் தளம் தவிர மற்றவை சிறப்பான தொழில்நுட்பத்தினால் தயாரிக்கப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை. இந்த கோவில் தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
தஞ்சையில் நேற்று மாலையில் கருமேகங்கள் திரண்டு திடீரென மழை பெய்ய தொடங்கியது. அவ்வப்போது பயங்கர சத்தத்துடன் இடி இடித்ததுடன் பளிச், பளிச்சென மின்னலும் வெட்டியது. இதில் தஞ்சை பெரியகோவில் முகப்பில் உள்ள கேரளாந்தகன் கோபுரத்தில் மின்னல் தாக்கியது. இதனால் கோபுரத்தின் உச்சியில் இருந்த பூ வடிவிலான சிற்பம் உடைந்து விழுந்தது. அப்போது பெரிய கோவிலில் இருந்த பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதன் காரணமாக அங்கு ஒரே பரபரப்பு நிலவியது.அதேநேரத்தில் கேரளாந்தகன் கோபுரத்தின் அருகே காலணிகள் பாதுகாக்கும் அறை உள்ளது. கோபுரத்தில் மின்னல் தாக்கியபோது காலணிகள் பாதுகாக்கும் அறையில் இருந்த குளிர்சாதன பெட்டியில் தீப்பொறி ஏற்பட்டதுடன், திடீரென மின்தடையும் ஏற்பட்டது. இதனால் அங்கு பணி புரியும் பணியாளர்களும், மழைக்காக அங்கே ஒதுக்கி நின்ற பக்தர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இடிதாங்கி பொருத்தப்பட்டதால் பெரும் சேதம் தவிர்ப்பு
பெரியகோவிலில் உள்ள கோபுரங்களில் எல்லாம் இடி தாங்கி பொருத்தப்பட்டுள்ளது. கேரளாந்தகன் கோபுரத்திலும் இடி தாங்கி பொருத்தப்பட்டு இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. ஏற்கனவே இதற்கு முன்பு ராஜராஜன் கோபுரத்தில் மின்னல் தாக்கியதில் கலசங்கள் உடைந்தன.
தஞ்சை பெரியகோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கும் சம்பவம் இது 3-வது முறையாகும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story