சூறைக்காற்றுடன் பெய்த மழையால் செடிமுருங்கை சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
மீன்சுருட்டி அருகே சூறைக் காற்றுடன் பெய்த மழையால் செடி முருங்கை சேதமடைந்தது. இதனால் உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்சுருட்டி,
தமிழக டெல்டா மாவட்டங்களில் அரியலூர் மாவட்டமும் ஒன்றாகும். தா.பழூர், திருமானூர் ஆகிய பகுதிகள் டெல்டா பகுதி கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளாக உள்ளன. இம்மாவட்டத்தில் சுமார் 1,200 எக்டர் பரப்பளவில் செடி முருங்கை சாகுபடி பயிரிடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன்சுருட்டி பகுதியில், பெருமளவு செடி முருங்கையை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பயிரை விவசாயிகள் பயிரிட்டு தற்போது பூக்கும் தருணத்தில் செடிகள் நன்கு செழித்து வளரும் தருவாயில் இருந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம், முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது. இதில் மீன்சுருட்டி பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த சூறைக்காற்றுக்கு சாலையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், சாலையோர மரங்கள், மின்கம்பங்கள் என பல்வேறு இடங்கள் பாதிப்புக்குள்ளானது. இம்மழைக்கு பிறகு நேற்று முன்தினம் மீன்சுருட்டி பகுதி விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நிலங் களுக்கு சென்று பார்த்தபோது செடி முருங்கை பயிர் ஆங்காங்கே சாய்ந்து கிடந்ததை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோன்று கங்கவடங்கநல்லூர், காட்டுக்கொல்லை, ஜெயங்கொண்டம் குறுக்குரோடு, குலோத்துங்கநல்லூர், காடுவெட்டி, படநிலை காடுவெட்டி, அய்யப்பநாயக்கன்பேட்டை, வங்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்ட செடி முருங்கை சூறைக் காற்றுக்கு சேதமடைந்தன. பூக்கும் தருணத்தில் இருந்து இன்னும் சில மாதங்களில் அறுவடைக்காக காத்திருந்த செடி முருங்கை இப்படி சேதமாகி விட்டதே என்று மீன்சுருட்டி பகுதி விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு செடி முருங்கையை பயிரிட்டோம். இன்னும் சில மாதங்களில் இவை அனைத்தும் அறுவடைக்கு தயாராகி விடும். அறுவடை செய்த முருங்கையை சென்னை, தஞ்சை, திருச்சி, கர்நாடகம், ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்வோம். தற்போது பெய்த சூறைக்காற்று மழைக்கு இப் பயிர் சேதமடையும் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை. எங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. வாங்கிய கடனை எப்படி அடைத்து, இதை எப்படி ஈடுகட்டபோகிறோம் என்றே எங்களுக்கு தெரியவில்லை. எனவே தமிழக அரசு சூறைக்காற்றுக்கு சேதமடைந்த செடி முருங்கைகளை கணக் கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story