திருச்சி விமான நிலையத்தில் புதுக்கோட்டை பயணியிடம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் புதுக்கோட்டை பயணியிடம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 6 Jun 2018 4:30 AM IST (Updated: 6 Jun 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் புதுக்கோட்டை பயணியிடம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, சவுதிஅரேபியா, துபாய் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகிறது. திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் சுங்கத்துறை வான் நுண்ணறிவுபிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து தனியார் விமானம் திருச்சி வந்தது.

அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் விமான நிலையத்தில் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த தனபால் என்பவரின் உடைமைகளை சோதித்தபோது, அவரிடம் இருந்த கைப்பையில் 20 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மறைத்து கடத்தி வரப்பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனே அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 13 லட்சத்து 41 ஆயிரம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக தனபாலிடம் விசாரித்து வருகிறார்கள். 

Next Story